
Two young girl students
ஈரோடு மாவட்டம் மைக்கேல் பாளையத்தை சேர்ந்தவர் ஓவியா மற்றும் சுகந்தி என்ற பள்ளி படிக்கும் இளம்பெண்கள். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போய் மூன்று நாட்கள் கழித்து பவானி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இதனை குறித்து மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அதன்பின்னர் மாணவிகள் ஆற்றங்கரையில் நின்று புகைப்படம் எடுத்துள்ளதை யாரோ மாணவிகளின் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளனர்.
அதன் அடிப்படையில் விசாரனை மேற்கொண்டு குற்றவாளியை கண்டு பிடித்துள்ளனர். அதில் பவானியை அடுத்த கொட்டாய் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அவரிடம் விசாரனையில் ஈடுப்பட்ட அதிகாரிகள் நந்தகுமார் இரண்டு மாணவிகளையும் அழைத்து கொண்டு பாலத்தில் அடியில் சென்றுள்ளார். அப்போது மாணவிகள் இருவரும் தண்ணீரில் குளிக்கும் போது அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறியுள்ளார்.
Advertisement
Advertisement