தமிழகம்

3 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த சிறுவர்கள்.! போலீசாரிடம் சொன்ன காரணம்.! அதிரவைக்கும் பகீர் சம்பவம்.!

Summary:

சிவகாசி அருகே 4 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த இரண்டு  சிறுவர்களை  போலீ

சிவகாசி அருகே 4 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த இரண்டு  சிறுவர்களை  போலீசார் கைது செய்தனர். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கு பிரியதர்ஷன்(8), தீனதயாளன்(4) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். வீட்டின் அருகே விளையாடிய தீனதயாளன் நேற்று முன்தினம் மாலை முதல் காணவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தீனதயாளனை காணவில்லை என்று பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சிறுவன் விளையாடிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பார்த்திபன் வீடு அருகே வசிக்கும் அல்போன்சாவின் பேரன் 13வயது மற்றும் 11வயது சிறுவர்கள் இருவரும் தீனதயாளளை அழைத்துக் கொண்டு செல்வது தெரியவந்தது. 

இதனையடுத்து அல்போன்சாவின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், அல்போன்சா வீடு கட்டுவதற்காக வீட்டின் முன்பு மணல் இறக்கிவைத்திருந்தார். இதில் குழந்தை தீனதயாளன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதைப் பார்த்த அல்போன்சா சிறுவன் தீனதயாளனைக் கண்டித்துள்ளார். இதனால் தீனதயாளனின் தந்தை பார்த்திபன், அல்போன்சா வீட்டாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 

இதனால் ஆத்திரமடைந்த அல்போன்சாவின் பேரன்கள் பிரவீன் குமார் மற்றும் அஜய் ஆகிய இரு சிறுவர்களும், குழந்தை தீனதயாளனை விஸ்வநத்தம் பகுதியில் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாக கூறியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அந்த கிணற்றிற்கு சென்று பார்த்த போது, கிணற்றில் சிறுவனின் சடலம் மிதந்து கிடந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர்.


Advertisement