தமிழகம்

கள்ளக்காதல் விவகாரம்.! பரிதாபமாக போன இரண்டு உயிர்.!

Summary:

கள்ளத்தொடர்பு விவகாரத்தில், இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் கிளங்காட்டூரைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணிற்கும், மணிச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த, சத்தியேந்திரன் என்பவருக்கும் நான்கு வருடத்திற்கு முன்பு  திருமணம் நடந்தது. இந்நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், அதே ஊரை சேர்ந்த வேல்ராஜ் என்பவருடன் வளர்மதிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் வேள்ராஜுடன் வளர்மதி திருச்சிக்கு சென்றுள்ளார். இதனையறிந்த வளர்மதியின் கணவர் அவரது சகோதரர்கள் மற்றும் வளர்மதியின் சகோதரர்களுடன் திருச்சிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், வேல்ராஜ் மாடியில் இருந்து விழுந்து படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து வளர்மதியை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், வேல்ராஜ் நேற்று முன்தினம் இறந்தார். இதனையடுத்து சத்தியேந்திரன் போலீசில் சரண் அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த வளர்மதியின் உறவினர்கள் வளர்மதியை வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


Advertisement