கூடா நட்பு கேடாய் முடியும்... மது படுத்திய பாடு.! பரிதாபமாக போன வாலிபர் உயிர்.!
கூடா நட்பு கேடாய் முடியும்... மது படுத்திய பாடு.! பரிதாபமாக போன வாலிபர் உயிர்.!

திண்டுக்கல் மாவட்டம் வடக்கு ரதவீதி முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் அருள் விசுவாசம். 34 வயது நிரம்பிய இவர் லோடுமேனாக வேலை செய்துவந்துள்ளார். இந்தநிலையில், இவர் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஸ்டிபன், ஜெபஸ்டியன் ஆகியோருடன் சேர்ந்து வடக்கு ரத வீதியில் உள்ள அரசு மதுபானக்கடையில் மது அருந்தியுள்ளனர்.
மது அருந்தும்போது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆரோக்கிய ஸ்டீபன், செபஸ்டியான் ஆகிய இருவரும் சேர்ந்து அருள் விசுவாசத்தின் தலையில் கல்லை போட்டுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அருள் விசுவாசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அருள் விசுவாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆரோக்கிய ஸ்டீபன், செபஸ்டியன் ஆகய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.