BREAKING: முதல்வர் விஜய் அதிரடியாக ரத்து செய்தார்! ஒரே நாளில் ரூ.2000 கோடி அவுட்... தூய்மை அரசின் அதிரடி செயலால் அதிர்ச்சியில் திமுக..!!!
தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள TVK அரசு, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பல முக்கிய டெண்டர்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெளியிடப்பட்ட சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மின்சாரத் துறையைச் சேர்ந்த பல பெரிய திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
மின்சார வாரிய டெண்டர்களுக்கு தடை
தகவலின்படி, TANGEDCO மற்றும் TNGECL உள்ளிட்ட மின்சார வாரியங்களின் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்கட்டமைப்பு மேம்பாடு, உபகரணங்கள் வாங்குதல், பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இந்த டெண்டர்கள் அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின், புதிய அரசு அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தொடக்க ஆய்வுகளில், பல திட்டங்களின் மதிப்பீட்டுத் தொகை வழக்கத்தை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!
முறைகேடு புகார்களின் பின்னணி
துறைச் சார்ந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, சில ஒப்பந்தங்களில் உண்மையான செலவை விட பல மடங்கு அதிக மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டிருந்ததாக புகார்கள் வந்துள்ளன. இதனால் அரசு நிதிக்கு இழப்பு ஏற்படும் சூழல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, TANGEDCO உள்ளிட்ட வாரியங்களின் முக்கிய டெண்டர்களை முழுமையாக மறுபரிசீலனை செய்ய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையான இடங்களில் புதிய டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தூய்மை நடவடிக்கை என அரசு வட்டாரங்கள் விளக்கம்
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத் துறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்த டெண்டர் ரத்து நடவடிக்கை பார்க்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், முந்தைய ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு பெரிய திட்டங்கள் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகாரிகள் மத்தியில் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட எதிர்பார்பில் மக்கள்! மகளிர் உரிமைத்தொகையில் தமிழக அரசு அதிரடி மாற்றம்.! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!!!