அரசியல் தமிழகம் Corono+

தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ரூ 1 கோடி நிதி! மாஸ் காட்டிய டிடிவி!

Summary:

TTV Dinakaran give corona relief fund

கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு ஆர்.கே நகர் தொகுதி நிதியிலிருந்து ரூ 1 கோடி வழங்குவதாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நாட்டில் பல பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதியை செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், அமமுக கழக தலைவர் TTV தினகரன் அவர்கள் " "கொரேனா"வின் கோரமுகத்தை அடக்க தனது தொகுதி நிதியிலிருந்து 1,0000000 (ஒரு கோடி) கொடுக்க முன்வந்துள்ளார்.

இதுகுறித்து அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும், கொரோனா தடுப்புப் பணிகளுக்‍காக, தமது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளருக்‍கு திரு.டிடிவி தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார்.


Advertisement