அரசியல் தமிழகம்

அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த டிடிவி தினகரன்.! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

அனைத்து வகை ஊடகங்களுக்கும் டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, நேற்று காலை கார் மூலம் சசிகலா சென்னை புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதனையடுத்து சசிகலா இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடம், ஜானகி அம்மாள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதனையடுத்து தி.நகர் வீட்டிற்கு வந்ததும் ஜெயலலிதா படத்திற்கு  சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளது. கர்நாடகாவிலும் தமிழகத்திலும் தன்னெழுச்சியாக வரவேற்பு அளித்த தொண்டர்களுக்கு நன்றி. 

இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பில் இருந்து கொடுக்கபட்ட நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும், அத்துமீறல்களையும் மிகுந்த பொறுமையோடும் ராணுவக் கட்டுப்பாட்டோடும் எதிர்கொண்டு எனது அன்பு வேண்டுகோளை ஒவ்வோர் இடத்திலும் கழக உடன்பிறப்புகள் செயல்படுத்தி காட்டியதை வரலாறு எப்போதும் மறக்காது. ஒரு சாதனையாக நிகழ்த்தப்பட்டிருக்கும் சின்னம்மாவுக்கான வரவேற்பை உலகமெங்கும் கொண்டு சேர்த்த அனைத்து வகை ஊடகங்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


Advertisement