புகார் அளிக்க வந்த பெண்ணின் மொபைல் நம்பருக்கு ஆபாச மெசேஜ்... மாவட்ட ஆட்சியரிடம் புகார்.மனு அளித்த பெண்!

புகார் அளிக்க வந்த பெண்ணின் மொபைல் நம்பருக்கு ஆபாச மெசேஜ்... மாவட்ட ஆட்சியரிடம் புகார்.மனு அளித்த பெண்!


trichy-gandhi-market-inspector-sends-inappropriate-msgs

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  எனக்கு காவல்துறை ஆய்வாளர் ஆபாசம் மெசேஜ் அனுப்புவதாக பின் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அந்தப் பெண் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகாரில் சில தினங்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு புகாரளிக்க சென்றதாகவும் அப்போது அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் சுகுமாரன் தனது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

trichy

அதன் பிறகு தனக்கு தொடர்ந்து இரவு நேரங்களில் ஆபாச செய்திகளை அவர் அனுப்பி வருவதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து இந்த விஷயத்தில் ஒரு முடிவு கட்ட வேண்டும் என அந்த பெண் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

புகார் அளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு காவல் ஆய்வாளர் ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான உண்மை நிலை என்ன என்பதை விசாரணைக்கு பின்பே தெரியவரும்.