தமிழகத்தில் தீவிரமாக பரவும் கொரோனா.! சிறப்பு ரயில்களும் ரத்து!

தமிழகத்தில் தீவிரமாக பரவும் கொரோனா.! சிறப்பு ரயில்களும் ரத்து!


train cancelled for corona increased

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாளை மறுநாள் முதல் ஜூலை 15-ந்தேதி வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுச் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

train

இந்தநிலையில், திருச்சி - செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், அரக்கோணம் - கோவை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், கோவை - மயிலாடுதுறை, திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.