'என் பிள்ளை போயிடுச்சு பா' - வாய்க்காலில் அடித்துச்செல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தை.. உடல் நடுங்கி கதறியழுத தாய்.! 



Tragic Incident in Cuddalore: 1.5-Year-Old Child Dies After Falling into Canal While Playing

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஒன்றரை வயது குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனிடையே சம்பவத்தன்று வீட்டை ஒட்டியபடி இருக்கும் வாய்க்காலில் பழனியின் இரண்டு மகன்களும் கல் போட்டு விளையாடியதாக தெரிய வருகிறது. 

 

வாய்க்காலில் அடித்துச்சென்ற குழந்தை:

அப்போது ஒன்றரை வயதான இளைய மகன் வாய்க்காலில் தவறி விழுந்த நிலையில், சகோதரரால் அவரை காப்பாற்ற முடியவில்லை. மூத்த மகன் வீட்டுக்குள் சென்று தாயிடம் கூறவே, அவரும், உறவினர் ஒருவரும் பதறியடித்துக்கொண்டு வந்து பார்த்துள்ளனர். ஆனால் குழந்தையை காணவில்லை. இதனால் குழந்தை நீரில் அடித்து செல்லப்பட்டதுள்ளதாக நினைத்து வெகுதூரம் சென்று தேடியுள்ளனர்.

Cuddalore

சடலமாக மீட்பு:

குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால் உடனடியாக  தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்வு இடத்திற்கு விரைந்து அதிகாரிகள் குழந்தையை சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, போலீசார் விரைந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

கதறிழுத குடும்பம்:

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் மரணத்தை ஏற்றுக் கொள்ள இயலாமல் குடும்பத்தினர் கதறி அழுவது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. குழந்தையின் தாய் தனது தந்தையிடம், "அப்பா என் பிள்ளை போயிடுச்சு பா" என உடல் நடுக்கத்துடன் கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.