புதுமாப்பிள்ளையின் உயிரைப்பறித்த ஜல்லிக்கட்டு.. திண்டுக்கல்லில் சோகம்.. கண்ணீரில் உறவினர்கள்.!



Tragedy at Dindigul Jallikattu Newly Married Bull Tamer Dies, 33 Injured

புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் ஏற்பட்ட விபத்த்தில் புதுமாப்பிள்ளை பலியானார்.

ஜல்லிக்கட்டில் சோகம்:

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி கிராமத்தில், புனித சந்தியாகப்பர் - செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (பிப்.11) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பாலகுரு (24) என்பவர் காளை முட்டியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து ஜல்லிக்கட்டு அரங்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தீ மிதிக்க தயங்கி நின்ற பெண்! தூக்கிக் கொண்டு தீக்குழியில் இறங்கிய முதியவர்! நொடியில் இரண்டு பேரும் தீகுழியில் விழுந்து...... பகீர் வீடியோ காட்சி!

ஜல்லிக்கட்டு போட்டி:

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 400க்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியர் திருமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் தைரியமாக எதிர்கொண்டு அடக்கினர்.

Dindigul

33 பேர் காயம்:

போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், குத்துவிளக்கு, குக்கர், ஃபேன், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. சிலர் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களையும் பரிசாக பெற்றனர். போட்டி நடைபெறும் போது ஏற்பட்ட மாடுகளின் தாக்குதலில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் உட்பட 33 பேர் காயமடைந்தனர்.

திருமணம் செய்த 6 மாதத்தில் சோகம்:

இதற்கிடையே, போட்டியில் பங்கேற்ற பாலகுருவை ஒரு காளை கழுத்துப் பகுதியில் கடுமையாக முட்டியது. உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்திருந்த பாலகுருவின் மரணம் அவரது குடும்பத்தையும், கிராம மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.