தமிழகம் New year-Flashback 2018

2018 இல் நாட்டை உலுக்கிய டாப் ஐந்து கள்ளக்காதல் கொலைகள்! அபிராமி உட்பட!

Summary:

Top five illegal relationship crimes in 2018

நாட்டில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவ்வாறு நடைபெறும் கொலைகளை ஆராய்ந்து பார்த்தால் அதிகமான கொலைகளுக்கு காரணம் கள்ளகாதலாகத்தான் உள்ளது. கள்ள காதலுக்காக பெற்ற பிள்ளைகளை தாயே கொள்வது, மனைவியின் கள்ள காதலால் கணவன் தீக்குளிப்பது என 2018 ஆம் ஆண்டு இந்த கள்ளக்காதல் விவகாரம் பெரும் சூறாவளியையே கிளப்பியது.

2018 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய டாப் கள்ள காதல் விவகாரங்கள் பற்றித்தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.

1 . குன்றத்தூர் அபிராமி
பிரியாணிக்கடை சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ள காதலால் பெற்ற தாயே தனது பிள்ளைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொன்ற சம்பவம் யாராலும் மறக்க இயலாது. குன்றத்தூரை சேர்ந்த அபிராமிதான் அந்த கொடூர தாய்.

2 . தோசை கல்லால் கணவனை அடித்து கொன்ற மனைவி
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண், தனது கள்ள காதலுக்கு தனது கானவர் இடைஞ்சலாக இருப்பதாக கூறி அவர் அவரது கணவனை தோசை கல்லால் அட்டித்து கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

3 . கணவனுக்கு விஷம்
தேனீ மாவட்டத்தை சேர்ந்த தமபதியினர் ஈஸவரன், கலைவாணி. ஈஸ்வரனுக்கு அதிகம் குடிப்பழக்கம். இதனால் வாழ்க்கையை வெறுத்து போன கலைவாணி ஆழகர்சாமியுடன் ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளார். அழகர்சாமியின் உறவில் மயங்கிய கலைவாணி தனது கணவருக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் யாராலும் மறக்க இயலாது.

4 . 19 வயது பையனுடன் என் மனைவி! தீக்குளிக்க முயற்சித்த ஐஸ் வியாபாரி
தர்மபுரியை சேர்ந்த ஐஸ் வியாபாரி ஒருவர் தனது மகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதற்கு காரணம் 36 வயதான அவரது பொண்டாட்டி 19 வயது பையனுடன் ஓடிவிட்டதாக கதறி அழுதார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது.

5 . கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது மகனை கொன்ற தாய்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது மனை தாயே கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாய் மாரியைக் கைது செய்தனர்.


Advertisement