தமிழகம்

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை.. இன்றை விலை நிலவரம் என்ன தெரியுமா?

Summary:

Today's gold rate in chennai

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. 

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தங்கத்தின் விலை எட்ட முடியாத அளவுக்கு உயர்வை சந்தித்தது. இந்நிலையில் இந்த மாதம் தங்கத்தின் விலை படிபடியாக குறைந்து கொண்டே வருகிறது.தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வருவதால், தங்கத்தில் முதலீடு செய்ய இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து இன்று சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து 39,352‬ ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 29 ரூபாய் குறைந்து 4919 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 69.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement