பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு!! எரிச்சலடைந்த வாகன ஓட்டிகள்!!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை இரண்டு மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் வேதனை அடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவந்தனர்.

இந்தநிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.08 க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.70.32ஆகவும் விற்கப்படுகிறது.