இவ்வளவு கிளாமர் கூடாது..ங்க.! "சார்பட்டா பரம்பரை" 'மாரியம்மா' வின் ஹாட் க்ளிக்ஸ்.!
மீண்டும் ஏறியது தங்கத்தின் விலை! இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை என்ன தெரியுமா? அடேங்கப்பா!
தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தின் முதலிலிருந்து அதிகரித்த தங்கத்தின் விலை சவரனுக்கு 29,000 ரூபாயைக் கடந்து வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைவதும் பின்னர் சற்று உயர்வதும் வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து ஒரே நாளில் சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 28 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 29,440 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஒரு ஒரு சவரனுக்கு 30 ஆயிரம் ரூபாயை வெகு விரைவில் எட்டிவிடும் வேகத்தில் உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.