அரசியல் தமிழகம்

தமிழக மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி திடீர் மரணம்..! சோகத்தில் குடும்பத்தினர்.!

Summary:

TN Minster dindugal srinivasan wife passes away

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் மனைவி கண்ணாத்தாள் (67) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தமிழக வனத்துறை அமைச்சராக செயல்படுபவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் . கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் சொந்த ஊரில் வசித்துவந்த இவரது மனைவி கண்ணாத்தாள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்படுவந்த நிலையில், இன்று தனது 67 வது வயதில் காலமானார்.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அமைச்சர் மனைவியின் இறுதி சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது. மேலும், அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.


Advertisement