அரசியல் தமிழகம்

ஒரே வாரத்தில் அனைத்து ஏழை தொழிலாளர்கள் வங்கி கணக்கில் ரூ.2000; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Summary:

tn govt

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 110 விதியின் கீழ் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார். ரூ.2,000 உதவித்தொகை வழங்க ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவி பெறுபவர்களின் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த நிதி உதவியை ஏழைத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி. மேலும் இத்திட்டம் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி 28ம் தேதிக்குள்ளாக அனைத்து ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்குகளிலும் ரூ 2000 செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


Advertisement