BREAKING : கடன் தள்ளுபடி.... தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்...!!!



tn-budget-rs17000-crore-crop-loan-announcement

2026-27 நிதியாண்டில் விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு ரூ.17,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் வினோத் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். வேளாண் துறைக்கு தொடர்ந்து நிதி ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ.17,000 கோடி பயிர்க்கடன் இலக்கு

பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் வினோத், மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு 2026-27 நிதியாண்டில் ரூ.17,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உச்சக்கட்ட எதிர்பார்பில் விவசாயிகள்! பயிர்க்கடன் தள்ளுபடி... பட்ஜெட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்...! தமிழக அரசின் அடுத்து வெளியாகும் அறிவிப்புகள்...!!!

ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றனர்

ஜூலை 15, 2026 வரை 12,752 விவசாயிகளுக்கு ரூ.159 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதையடுத்து, 19,324 பயனாளிகளுக்கு ரூ.140 கோடி மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடன் தள்ளுபடிக்காக ரூ.5,267 கோடி

விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் நடவடிக்கையாக பயிர்க்கடன் தள்ளுபடிக்காக நான்கு தவணைகளில் மொத்தம் ரூ.5,267 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு தேவையான நிதி ஆதரவை தொடர்ந்து வழங்க அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: வெற்றி என்ற பெயரில் வெறும் ஏமாற்றமே மிச்சம்...! தவெக அரசின் முதல் பட்ஜெட்டை கிழித்தெடுத்த தமிழிசை சௌந்தரராஜனின் வீடியோ...!!!