விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் பிரம்மாண்ட மலைப்பாம்புடன் குத்தாட்டம் போட்ட பெண்....! உடனே போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை... ஷாக் வீடியோ..!!!



hyderabad-ganesh-procession-python-animal-cruelty

ஹைதராபாத் ஜவஹர்நகரில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில், பொதுமக்கள் முன்னிலையில் இந்திய மலைப்பாம்பு மற்றும் கோழியை வைத்து வன்கொடுமை செய்ததாக நடனக் குழுவினர் மீது புகார் எழுந்துள்ளது. தகவல் அறிந்த விலங்குகள் வன்கொடுமைத் தடுப்பு அமைப்பினர், அந்தக் குழுவை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து காவல்துறை உதவியுடன் பாம்பாட்டி ஒருவர் பிடிபட்டார்.

ஐந்து நாட்களாக தொடர்ந்த கண்காணிப்பு

விசாகப்பட்டினத்தில் இருந்து வந்ததாக கூறப்படும் அந்த டான்ஸ் குழுவினர், ஊர்வல நிகழ்ச்சிகளில் பாம்பை பயன்படுத்தி ஆட்டம் காட்டி வந்ததாக விலங்குகள் வன்கொடுமைத் தடுப்பு அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 5 நாட்களாக அவர்களின் நடமாட்டத்தை அமைப்பினர் கண்காணித்து வந்தனர்.

இதையும் படிங்க: எனக்கு மனைவி வேணாம்... மனைவியோட சித்தி தான் வேணும்! பிடிவாதம் பிடித்து குடும்பத்தினருக்கு மிரட்டல் விட்ட 26 வயது வாலிபர்... உ.பி-யில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!!

கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கொண்டாப்பூர் பகுதியில் குழுவினரை பிடிக்க முயன்றபோது, பாம்பாட்டி அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

காவல்துறை உதவியுடன் சிக்கிய பாம்பாட்டி

தொடர்ந்து செப்டம்பர் 20ஆம் தேதி மதுரா நகர் பகுதியில் பாம்பாட்டி இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற விலங்குகள் வன்கொடுமைத் தடுப்பு அமைப்பினர், மதுரா நகர் காவல்துறையின் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இந்திய மலைப்பாம்பு மற்றும் கோழி ஆகியவை மீட்கப்பட்டன.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை

இந்திய மலைப்பாம்பு, 1972ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினமாகும். எனவே, அதை அனுமதியின்றி பிடித்து ஊர்வலத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரம் சட்டரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விலங்குகள் வன்கொடுமை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பாம்பை எங்கிருந்து கொண்டு வந்தனர், நிகழ்ச்சிகளில் எவ்வாறு பயன்படுத்தினர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீட்கப்பட்ட மலைப்பாம்பு மற்றும் கோழி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஊர்வலங்களில் விலங்குகளை பயன்படுத்தி பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: என்ன மனுஷயா இவரு? ரசாயன தொட்டியில் மயங்கி விழுந்த 5 அடி பாம்பு! உடனே நபர் செய்த அந்த ஒரு காரியம்... ஷாக்கிங் வீடியோ...!!!