வாட்ஸப்பில் கணவன் வைத்த ஸ்டேட்டஸ்.. பரிதவிப்பில் உயிரை விட்ட மனைவி.. திருவாரூரில் கண்ணீர் சோகம்.!



Tiruvarur Woman Dies by Suicide After Mistaking Husband's WhatsApp Status as Death Announcement

குடும்பச்சண்டையில் எலி மருந்தை சாப்பிட்டு ஸ்டேட்டஸ் வைத்த கணவனால், மனைவி வருத்தத்தில் விபரீத முடிவு எடுத்தார்.

தம்பதிகள்:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, கரும்பியூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரவீன் (வயது 31). இவரின் மனைவி காயத்ரி (வயது 24). தம்பதிகளுக்கு நான்கரை வயதுடைய மகனும், 2 வயது மகளும் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: 'அம்மா போன இடத்துக்கே போயிடலாம் தம்பி' மனைவி இறந்த துக்கத்தில் நடந்த சோகம்.. கண்ணீரில் உறவினர்கள்.!

கணவன்-மனைவி சண்டை:

நாகப்பட்டினத்தில் செயல்படும் பெட்ரோல் பங்கில் பிரவீன் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கணவன் - மனைவி இடையே கருது வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரவீன் மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

Crime news

விபரீதம்:

பின் மேட்டுப்பாளையம் அம்மன் கோயில் பகுதிக்குச் சென்ற பிரவீன், எலி மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார். பின் தனது வாட்ஸப்பில் ஏற்கனவே எடிட் செய்து வைத்திருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன காயத்ரி, கணவர் இறந்துவிட்டதாக நினைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கண்ணீர் சோகம்:

எலிமருந்து சாப்பிட்டு மயங்கி இருந்த பிரவீனை அப்பகுதி மக்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்த தொடங்கியபோது, காயத்ரியின் மரணமும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: பிஸ்கட் சாப்பிடுவதில் அக்கா-தம்பி சண்டை.. பரிதாபமாக பறிபோன உயிர்.. திண்டுக்கல்லில் சோகம்.!