மதுவை பங்கிடுவதில் தகராறு.. சேற்றில் அமுக்கி கொலை செய்த நட்பு.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு.!



Kanchipuram Murder: Man Killed by Friend After Liquor Sharing Dispute

ஏரியின் சேற்றில் அமுக்கி இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நண்பர் கைது செய்யப்பட்டார்.

நண்பர்கள்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காரை கிராமத்தில் வசித்து வருபவர் அருள்மணி (வயது 29). இவர் கூத்திரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 28). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். எந்த வேலையும் செய்யாமல் இருவரும் ஊரைச் சுற்றி வந்துள்ளனர். மதுபான கடைக்கு வரும் நபர்களிடம் ரூ.5, ரூ.10 வாங்கி மது அருந்துவதை வாடிக்கையாகவும் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பயங்கரம்.. வயலில் நடந்தது என்ன? கிருஷ்ணகிரியை அதிரவைக்கும் கொடூரம்.!

சேறு-சக்தியில் மூழ்கடித்து கொலை:

இருவரும் வழக்கம்போல நேற்று இரவு நேரத்திலும் கிடைத்த தொகையில் மது வாங்கிவிட்டு ஏரிக்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு கிளாசில் மதுவை சமமாக பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு கைகலப்பு உண்டாகியுள்ளது. இந்த தகராறில் அருள்மணி மணிகண்டனை கடுமையாக தாக்கினார். இதனால் அவர் மயங்கி விழவே, அவரை சேறு-சக்திக்கு இழுத்துச் சென்று தலையை அமுக்கி கொலை செய்துள்ளார்.

Crime news

அலறிய உள்ளூர் மக்கள்:

பின் அங்கிருந்து அவர் தப்பிவிட்ட நிலையில், எரிக்குச் சென்றவர்கள் சடலத்தை கண்டு அதிர்ந்தபடி ஓட்டம் பிடித்துள்ளனர். பின் தகவல் அறிந்த பொன்னேரிக்கரை காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து  சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அருள்மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: ஐயோ பாவம்.. திருடன் என நினைத்து அப்பாவி வடமாநில இளைஞர் அடித்துக்கொலை.. வேலூரில் சோகம்.!