நோய் விரக்தியால் சோகம்.. தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. திருவண்ணாமலையில் துயரம்.!
நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நபர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.
தம்பதி:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நல்லவன்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரகுமார் (வயது 42). இவர் ஹரியானா மாநிலத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்துவ வருகிறார். சந்திரகுமாரின் மனைவி சிந்து (வயது 38). தம்பதிகளுக்கு மகன் இருக்கிறார்.
இதையும் படிங்க: பாஸ்புக்கை ஏண்டா தொலைச்ச? கண்டித்த தாய்.. விபரீத முடிவெடுத்த 17 வயது சிறுவன்..!
நுரையீரல் தொற்று:
இதனிடையே, சந்திரகுமார் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் சந்திரகுமாருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது உறுதியானது. இதனால் வேலூரில் செயல்படும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நோய் குணமாகாமல் வேலைக்கும் செல்ல முடியவில்லை.
சோகம்:
குடும்பத்தையும் கவனிக்க இயலாததால் மனவேதனையடைந்த சந்திரகுமார், மனைவியிடம் வருத்தத்தை கூறி இருக்கிறார். கணவரின் நிலைமையால் சிந்துவும் சோகத்தில் இருந்துள்ளார். தம்பதி கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வேலூர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு புறப்பட்டுள்ளது.

தற்கொலை:
பின் மீண்டும் வீட்டுக்கு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடி இருக்கின்றனர். பின் திருவண்ணாமலை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் தம்பதியை தேடி வந்தனர். இந்நிலையில், ஆரணி, வடமாதிமங்கலம் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண்-பெண் சடலம் நசுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது.
கண்ணீரில் உறவினர்கள்:
தகவல் அறிந்து நேரில் சென்ற அதிகாரிகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பின் விசாரித்தபோது சந்திரகுமார் - சிந்து தம்பதி என்பது தெரியவந்தது. இருவரும் அதிகாலை 04:30 மணிக்கு திருவண்ணாமலை நோக்கி பயணம் செய்த அதிவிரைவு ரயிலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் உறவினர்கள் கண்ணீரில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 21 வயது இளம் பேட்மிட்டன் வீரரின் உயிரை பறித்த காதல்.. சித்ரவதை செய்து நடந்த கொடூரம்? குடும்பத்தினர் கண்ணீர்.!