யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த மாமியார்.. திருப்பூர் ஐடி ஊழியருக்கு நேர்ந்த சோகம்..!
இயற்கை வைத்தியம், இயற்கை பிரசவம் என்ற பெயரில் மருமகளுக்கு மாமியார் செய்த செயலால் உயிர் பறிபோனது.
ஐடி தம்பதிகள்:
Uttukuli News: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி, தளவாய்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் குழந்தைசாமி (வயது 36). இவரின் மனைவி சசிகலா (வயது 32). தம்பதிகள் ஐடி நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு 4 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது.
இதையும் படிங்க: தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மரணம்.. கோவை மருத்துவமனையில் சோகம்.!
வீட்டில் பிரசவம்:
இதனிடையே, சசிகலா மீண்டும் கோபமான நிலையில், இயற்கை முறையில் சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் 24ம் தேதி அதிகாலை சுமார் 5.45 மணியளவில் பிரசவ வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமலேயே மாமியார் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்துள்ளார்.

பெண் மரணம்:
இதில் பெண்ணுக்கு பெண் குழந்தையும் பிறந்த நிலையில், நஞ்சுக்கொடி வெளியேறாத காரணத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. பின் உடனடியாக பெண்மணி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே, அங்கு கர்ப்பப்பை உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. பின் ஜூன் 25ம் தேதி கோவையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விஷயம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஊத்துக்குளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'நீ போன இடத்துக்கு நானும் வாரேன்' கணவன் இறந்த துக்கத்தில் மனைவி விபரீதம்.. கண்ணீரில் உறவினர்கள்.!