“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!
போலியோ சொட்டுமருந்து எடுத்துக்கொண்ட குழந்தை திடீர் மரணம்.. கடலூரில் பெற்றோர்கள் கண்ணீர்.!
மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொண்ட குழந்தை உயிரிழந்தது.
ஆண் குழந்தை:
18-Month-Old Child Dies: கடலூர் மாவட்டத்தில் உள்ள தூக்கணாம்பாக்கம், நல்லாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜி (வயது 27). இவர் ஓட்டுநர் ஆவார். இவரின் மனைவி ராஜம். தம்பதிகளுக்கு ஒன்றரை வயதுடைய ஹரிஹரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறார்.
இதையும் படிங்க: 3 வயது சிறுமி நாய் தாக்கி பலி.. 2 நாட்கள் போராடி பிரிந்த உயிர்.. கண்ணீர் சோகம்.!
போலியோ முகாம்:
தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்த நிலையில், குழந்தைக்கு நல்லாத்தூர் துணை சுகாதார நிலையத்தில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. பின் புட்டிபால் கொடுக்கப்பட்டு குழந்தை உறங்க வைக்கப்பட்டார்.

பறிபோன உயிர்:
பின் மதிய நேரமும் குழந்தை எழுந்துகொள்ளாமல் இருந்துள்ளார். அவரை எழுப்பியபோது பேச்சு இல்லை. இதனால் மயக்கத்தில் இருந்த சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுவன் வழியிலேயே உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில் உண்மை தெரியவரும்:
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். குழந்தையின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த சிறுமி கொலை.. தாய் & கள்ளக்காதலன் கைது..!