கொலையில் முடிந்த சமரச பேச்சு.. ஊர் மக்கள் முன்னிலையில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.!



Family Dispute Turns Fatal: Husband Arrested After Allegedly Killing Wife in Front of Villagers

ஊர் மக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசிக்கொண்டு இருக்கும்போதே கணவர் மனைவியை கொடூரமாக கொலை செய்தார்.

தம்பதிகள்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள உனுஸனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 30). இவர் கூலித்தொழிலாளி ஆவார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, மாடக்கல், மல்லிகைபாய் தொட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுஷ்மிதா (வயது 24). 

இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!

குடும்ப பிரச்சனை:

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தம்பதிகள் திருமணம் செய்துகொண்ட நிலையில், 2 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறார். இதனிடையே, கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணவரிடம் கோபித்துக்கொண்ட சுஷ்மிதா தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

Crime news

குத்திக்கொலை:

இந்நிலையில், நேற்று மதியம் ராஜேஷ் தனது தந்தை கோவிந்தப்பா, தாய் கெம்பம்பா, ஊர் பெரியவர்கள் 30 நபர்களுடன் சுஷ்மிதா வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, கணவன்-மனைவி இடையே தகராறு உண்டாகி இருக்கிறது. ஊர்மக்கள் பஞ்சாயத்து பேசிக்கொண்டு இருக்கும்போதே, ராஜேஷ் மறைத்து வைத்து எடுத்து வந்த கத்தியைக்கொண்டு மனைவியின் கழுத்தில் குத்தி இருக்கிறார்.

அதிகாரிகள் விசாரணை:

இந்த சம்பவத்தில் சுஷ்மிதா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை கொலை செய்து அங்கிருந்து தப்பியோடிய ராஜேஷ், கர்நாடக மாநிலம் கோடஹள்ளி காவல் நிலையத்தில் விஷயத்தை கூறி சரணடைந்தார். இதனையடுத்து, தளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வசம் ராஜேஷ் ஒப்படைக்கப்பட்டார். தகவல் அறிந்து சுஷ்மிதாவின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 

இதையும் படிங்க: கணவன்-மனைவி தகராறை தீர்த்துவைக்காத நபர் குத்திக்கொலை.. ஆத்திரத்தில் அரங்கேறிய வெறிச்செயல்.!