பிரபல சீரியல் நடிகையின் அழகிய குழந்தைபருவ புகைப்படம் வைரல்! அந்த நடிகை யார் தெரியுமா?
#BigBreaking: குறைந்த மதிப்பெண் பெற்றால் படிக்க அனுமதி இல்லை - அரசுப்பள்ளி நிர்வாகம் கறார்.. பரபரப்பு குற்றசாட்டு.!

அரசு பள்ளியின் மீது எழுந்த குற்றச்சாட்டால் பரபரப்பு உண்டாகியுள்ளது.
கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாட்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மதிப்பெண் குறைந்த மாணவர்களை பள்ளியில் படிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிப்பெண் குறைவாக பெற்றுள்ளதால், பள்ளிப்படிப்பை கைவிட்டு ஐ.டி.ஐ கல்லூரியில் சென்று படிக்கச் ஆசிரியர்கள் வற்புறுத்துவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வாக்குவாதம் செய்ய, ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக்கொள்வதாக ஒப்புக்கொண்டனர்.