பணம் வாங்க போவோம் வா... கணவனை நம்பி பைக்கில் ஏறிய இளம்பெண்! ஆள்நடமாட்டமில்லாத காலி இடத்தில் நடந்த பயங்கரம்..! அடுத்து கணவன் செய்த அதிர்ச்சி... விசாரணையில் வெளியான பகீர் பின்னணி..!!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர், பின்னர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ரத்தக் காயங்களுடன் கிடந்த ரசிகாவின் உடலை போலீசார் மீட்டனர். இதற்கிடையே, ராசிபுரம் அருகே கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்ட கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீடு திரும்பாத தம்பதி; காலி இடத்தில் சடலமாகக் கிடந்த ரசிகா
திருச்செங்கோடு சின்னபாலத்து தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (26). லாரி மெக்கானிக்காக வேலை செய்து வரும் இவருக்கும், 21 வயதான ரசிகாவுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணேசனின் குடிப்பழக்கத்தால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரைப் பிரிந்த ரசிகா, அதே பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி வழக்கில் ஆரம்பத்தில் கதறி அழுத தாய்! ஆனால் இப்போ... திகைத்துப் போன சிபிசிஐடி! 35 நாட்களுக்குப் பின் சிக்கிய அதிர்ச்சி தகவல்...!!!
இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் இருவரும் சமாதானமாகப் பேசியுள்ளனர். முன்பு வசித்த வீட்டில் பாம்புத் தொல்லை இருந்ததால், வேறு வீடு பார்க்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக ரூ.5,000 முன்பணம் கொடுத்திருந்த நிலையில், மீதமுள்ள ரூ.10,000 பணத்தை வாங்குவதற்காக நேற்று (நவம்பர் 16) காலை 10.30 மணியளவில் ரசிகாவை கணேசன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், இருவரும் வீடு திரும்பவில்லை.
மாலையில் திருச்செங்கோடம்பாளையம் சண்முகபுரம் களரங்காடு சாலையில், குமரன் கோவில் அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ரசிகா ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். ஆடு மேய்க்கச் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் திருச்செங்கோடு ஊரகப் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அஸ்வினியும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்ததாக விசாரணையில் தகவல்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது களரங்காடு பகுதியில் கணேசனுக்கும் ரசிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அது முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால் ரசிகாவின் கழுத்து, மார்பு, தொடை, முதுகு உள்ளிட்ட இடங்களில் கணேசன் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராசிபுரம் அருகே கணவர் தற்கொலைக்கு முயற்சி
மனைவியைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிய கணேசன், தனது செல்போனை அணைத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே உள்ள நாச்சிப்பட்டி பகுதிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய அவர், பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் உடலின் பல்வேறு இடங்களில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது.
இதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் கணேசனை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் கணேசனிடம் விசாரணை நடத்தவும், பாதுகாப்புப் பணியிலும் திருச்செங்கோடு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.