தவெக நிர்வாகிக்கு ஒரே ஒரு வீடியோவால் மகாராஜனின் மனைவி வைத்த ஆப்பு..! இரவோடு இரவாக பதவியை பறித்த CM விஜய்...!!!



coimbatore-tvk-functionary-removed

கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் பெற்றதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணின் இருசக்கர வாகன ஷோரூமில் ரகளையில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வேடப்பட்டி நகரச் செயலாளர் பிரகாஷ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

கட்சிப் பதவி வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் பெற்றதாக புகார்

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது வேடப்பட்டி நகரச் செயலாளர் பிரகாஷ், மகாராஜனிடம் இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது ரூ.1 லட்சம் கொடுத்தால் கட்சியின் இளைஞர் அணிப் பொறுப்பைப் பெற்றுத் தருவதாக பிரகாஷ் கூறியதாகத் தெரிகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகும் பதவி வாங்கித் தராமல் காலம் தாழ்த்தியதாக மகாராஜன் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆளும் ஆட்சியை காப்பாற்ற தவெக போடும் பிளான்! டெல்லியில் நடந்த ரகசிய ஆபரேஷன்.. CM விஜய்யின் வியூகம் ஒர்க் அவுட் ஆகுமா..?!!!

பணத்தைத் திருப்பிக் கேட்டதால் ஷோரூமில் தகராறு

இதற்கிடையே, பிரகாஷ் வாங்கிய இருசக்கர வாகனத்தைப் பதிவு செய்வதற்காக மகாராஜனின் ஷோரூமில் ஒப்படைத்துள்ளார். அப்போது, ஏற்கெனவே கொடுத்த ரூ.1 லட்சத்தைத் திருப்பித் தந்தால் மட்டுமே வாகனத்தை ஒப்படைக்க முடியும் என மகாராஜன் கூறியதாகத் தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 14-ஆம் தேதி மகாராஜன் இல்லாத நேரத்தில், தனது ஆதரவாளர்களுடன் ஷோரூமுக்குச் சென்ற பிரகாஷ், அங்கிருந்த மகாராஜனின் மனைவி திவ்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை திவ்யா தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வீடியோ பரவியதைத் தொடர்ந்து விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பிரகாஷ் நீக்கம்

இந்தப் புகாரைத் தொடர்ந்து, கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாகவும், கட்சியின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவெக கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் வெளியிட்ட உத்தரவில், பிரகாஷை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக அறிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.! அன்புமணிக்கு எதிராகத் தனி கட்சி தொடங்கும் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி...! டிச.6-ல் இருக்கும் மெகா சம்பவம்...!!!