"இதெல்லாம் ஒரு போதையா? நான் வேறு போதை காட்டுகிறேன் என்று சொன்ன அண்ணன்!" பிரபல நடிகர் உருக்கம்!
பட்டப்பகலில் டிப் டாப் சகோதரிகள் மூன்று பேர் செய்த காரியம்..! ஹைடெக் திருட்டு.! மக்களே உஷார்.
பட்டப்பகலில் டிப் டாப் சகோதரிகள் மூன்று பேர் செய்த காரியம்..! ஹைடெக் திருட்டு.! மக்களே உஷார்.

கோவை மாவட்டம் கோனியம்மன் கோவில் தேரோட்டம், கடந்த, 4ம் தேதி நடந்தது. இதில் கூட்ட நெரிசலில் 35 நபரிடம் 10 சவரன் நகை கொள்ளை போனது. இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் சிசிடிவி கேமராவில் சந்தேகத்திற்குரிய 3 நபர்களை பிடித்தனர்.
கோவில் திருவிழா கூட்டங்களில் அடிக்கடி பெண்களின் நகை திருட்டு போவது வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு சிலர் திருவிழா கூட்டங்களில் திருடுவதற்காகவே கோவிலுக்கு வருகின்றனர். அந்த வகையில் தான் கோவை கோனியம்மன் கோவில் தேரோட்ட விழாவில் இந்த திருட்டு நடந்துள்ளது.
கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது 35 சவரன் நகை திருடப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் சுற்றி வந்த மூன்று பெண்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட, சென்னை திருவான்மியூரை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி, 36, ரஞ்சித்குமார் மனைவி பராசக்தி, 36, பாண்டியராஜன் மனைவி இந்துமதி, 27, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.
உறவினர்களான இந்த மூவரும், இந்தியா முழுவதும் நடக்கும் கோவில் விழாக்கள் குறித்து இணையதளங்கள் மூலம் தகவல் திரட்டுகின்றனர். பின்னர் கூட்ட நெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நகை திருட்டை செயல்படுத்துகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் நடந்த விழாவிலும் நகை திருடியதை இவர்கள் ஒப்புக்கொண்டனர்.