தமிழகம்

சைக்கிளில் சென்று நள்ளிரவில் திருட்டு.. 71 வயது முதியவர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்.!

Summary:

சைக்கிளில் சென்று நள்ளிரவில் திருட்டு.. 71 வயது முதியவர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்.!

விளாத்திகுளம் பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் சைக்கிளில் சென்று திருடும் பழக்கத்தை வைத்திருந்த 71 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அடுத்தடுத்து பெறப்பட்ட புகார்களின் பேரில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், விளாத்திகுளம் அருகேயுள்ள கிராமத்தில் இருக்கும் மளிகை கடையில் ரூ.80 ஆயிரம் பணம் திருட்டு போனது. இந்த விஷயம் தொடர்பாக மளிகை கடை உரிமையாளர் சி.சி.டி.வி கேமிரா ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் சி.சி.டி.வி கேமிராவை காணுகையில், முதியவர் ஒருவர் சைக்கிளில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது அம்பலமானது. இதனையடுத்து, முதியவருக்கு வலைவீசப்பட்ட நிலையில், நேற்று ராஜேந்திரன் (வயது 71) என்ற முதியவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

அவரிடம் நடந்த விசாரணையில் விளாத்திகுளம் பகுதியில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், நள்ளிரவு வேளைகளில் சைக்கிளில் சென்று கைவரிசை காண்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்பதும் உறுதியானது.


Advertisement