இது வேற மாதிரி... அண்ணனை கொலை செய்ய முயன்ற நபர்.. இன்ஸ்டா மூலம் ஸ்கெட்ச்.! தங்கை உட்பட 4 பேர் கைது.!

இது வேற மாதிரி... அண்ணனை கொலை செய்ய முயன்ற நபர்.. இன்ஸ்டா மூலம் ஸ்கெட்ச்.! தங்கை உட்பட 4 பேர் கைது.!


this-is-different-the-sister-who-sketched-the-man-who-t

மதுரையில் அண்ணனை கொலை செய்ய முயன்ற நபரை கணவரின்  துணையோடு  இன்ஸ்டாகிராம்  மூலம் திட்டம் தீட்டி கொலை செய்ய முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் முரட்டன்பட்டியை சேர்ந்த வினித் குமார் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த  ஜாக்ஸ் என்பவருக்கும் இடையே கும்பல் தகராறு மற்றும் கோஸ்டி மோதலிருந்து வந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு  வினித் குமார் ஜாக்ஸை  கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் படுகாயங்களுடன் உயிர் தப்பிவிட்டார் ஜாக்ஸ். இதனைத் தொடர்ந்து ஜாக்ஸ் மற்றும் அவரது சகோதரி அனுசியா இருவரும் சேர்ந்து வினித் குமாரை கொலை செய்ய முடிவு எடுத்தனர்.

tamilnaduஇதற்காக தனது கணவருடன் சேர்ந்து திட்டம் தீட்டிய  அனுசியா இன்ஸ்டாகிராமில்  அம்மு குட்டி என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கி அதன் மூலம் வினித் குமாருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு நெருங்கி பழகி வந்திருக்கிறார். மேலும் அவரை காதலிப்பது போலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தான் மதுரைக்கு வந்திருப்பதாகவும் தன்னை தனியாக சந்திக்க வேண்டும் என்றும் வினித் குமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

tamilnaduஇதனைத் தொடர்ந்து வினித் குமார் அம்மு குட்டி என்ற பெயரில் இருந்த அனுசியாவை சந்திப்பதற்காக சின்னசொக்கிகுளம் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லா சந்துக்கு  வந்துள்ளார். அங்கு மறைந்திருந்த அனுசியாவின் கணவர் ஜானி முருகன் மற்றும் அவரது நண்பர் திருப்பதி ஆகியோர் வினித் குமாரை வெட்டி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து வினித் குமார் அலறவே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வினித் குமார் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறை அனுசியா, அவரது கணவர் ஜானி முருகன்,நண்பர் திருப்பதி  மற்றும் அனுசியாவின் தோழி சரண்யா ஆகியோரை கைது செய்துள்ளது.