தமிழகம்

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

Summary:

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இன்று காலை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதில் மாவட்ட கலெக்டர்களிடம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Advertisement