20 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஆபாச வலைவீசி பணம் பறித்த கல்லூரி மாணவர்.. பரபரப்பு தகவல்.!

20 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஆபாச வலைவீசி பணம் பறித்த கல்லூரி மாணவர்.. பரபரப்பு தகவல்.!


Thiruvallur Youngster Cheated by Man Fb Fake Account Using Trap Porn Website

முகநூலில் உள்ள ஆபாச பக்கத்திற்கு வந்து தகவல் தரும் இளைஞர்களை குறிவைத்து கல்லூரி மாணவர் பெண் போல பேசி, ஆபாச படங்களை பெற்று செல்போனை ஹேக்கிங் செய்து பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டரைபெருமந்தூர் பகுதியை சார்ந்த 32 வயது இளைஞர், திருவள்ளூரில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் முகநூல் கணக்கை உபயோகித்து வந்த நிலையில், ஆபாச பக்கத்திற்கு சென்ற நேரத்தில், அதில் கேட்கப்பட்ட விபரத்தை கொடுத்துள்ளார். இதன்பின்னர், அவரை தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர் பெண்போல பேசிய நிலையில், இருவரும் தங்களின் வாட்சப் எண்ணினை பரிமாறிக்கொண்டுள்ளனர். 

வாட்ஸப்பில் இருவரும் பேசிவந்த நிலையில், ஒருகட்டத்தில் தங்களின் நிர்வாண புகைப்படத்தை பரிமாறியுள்ளனர். பின்னர், பெண்போல பேசிய நபர் வாலிபரின் எண்ணுக்கு குறுஞ்செய்தி லிங்க்கை அனுப்பிய நிலையில், அதனை வாலிபர் கிளிக் செய்ததும் அவரின் போன் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது. வாலிபரின் போனில் இருந்த தகவல்களை பெண் போல பேசிய நபர் ஹேக்கிங் செய்து சேமித்துள்ளார். 

thiruvallur

இதன்பின்னர், பெண் போல பேசியவர் வாலிபரை மிரட்ட தொடங்கி, உனது நிர்வாண புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனை அனுப்பாமல் இருக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில், அவ்வப்போது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பறித்து இருக்கிறார். மிரட்டல் தொடர்ந்து அதிகரித்து வரவே, வாலிபர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரிடம் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, வாலிபருக்கு மிரட்டல் விடுத்த நபரின் எண்ணை வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலை, அவர் அடிக்கடி செல்போன் எண்ணை தொடர்ந்து மாற்றி வந்ததால், ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து அவரை கண்காணித்து தேடி வந்துள்ளனர்.

thiruvallur

தீவிர விசாரணைக்கு பின்னர் பணம் கேட்டு மிரட்டியது இராணிப்பேட்டை மாவட்டம் தெக்கால் கிராமம் அருகேயுள்ள புளியங்கன்னு பகுதியை சார்ந்த கல்லூரி மாணவர் நரேந்திரநாத் என்பது தெரியவந்தது. இவர் வேலூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் 2 ஆம் வருடம் பயின்று வந்துள்ளார். நரேந்திரநாத்தை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இதனைப்போல 20 க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பணம் பறித்தது அம்பலமானது. 

மேலும், 20 வாலிபர்களின் செல்போன்களை ஹேக்கிங் செய்து பணம் பறித்து வந்த நிலையில், இலட்சக்கணக்கில் பணம் பறித்தால் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்து, அதிகட்சமாக நபருக்கு ரூ.20 ஆயிரம் வரை என திட்டமிட்டு பணம் பறித்து வந்துள்ளார். மேலும், முகநூல் வாயிலாக ஆபாச பக்கத்திற்கு வரும் நபர்களை குறிவைத்து இவ்வாறான மோசடி நடந்தப்பட்டதும் அம்பலமானது.  

thiruvallur

முதலில் பெண்ணை போல சேட்டிங் செய்யும் நரேந்திரநாத், வாலிபர்களின் செல்போன் எண்ணை வாங்கி வாட்ஸப்பில் காதல் வலைவீசி இருக்கிறார். பெண் குரலில் பேச புதிய ஆப்பையும் பயன்படுத்தி வந்த நிலையில், இவரது குரல் மாற்று மாயையில் சிக்கிக்கொள்ளும் வாலிபர்களிடம் நிர்வாண படத்தை அனுப்பக்கூறி பேசுவார். அவர்கள் புகைப்படம் அனுப்பியதும், லிங்கை அனுப்பி போனை ஹேக்கிங் செய்து பணம் பறித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட வாலிபர்களும் பெரிய அளவில் பணம் இழக்காமல் தப்பித்தோம், வெளியில் விஷயம் தெரிந்தாலும் அவமானம் என எண்ணி புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். இப்படியான நிலையில் பட்டரைபெருந்தூர் இளைஞருக்கு விரிக்கப்பட்ட வளையில் அவர் சிக்கியிருந்தாலும், இறுதியில் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.