ஆத்திரத்தில் தாயின் கழுத்தறுத்து கொலை.. வீட்டில் புதைக்க முயற்சி.. அசதியால் அகப்பட்ட கொடூர மகன்.!

ஆத்திரத்தில் தாயின் கழுத்தறுத்து கொலை.. வீட்டில் புதைக்க முயற்சி.. அசதியால் அகப்பட்ட கொடூர மகன்.!


Thiruvallur Vellavedu Man Murder his Mother and Try to Dig Body in Home

தாயை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைக்க முயற்சித்த மகன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் மல்லிகா (வயது 48). இவரின் கணவர் ஆனந்த். தம்பதிகளுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இவர்களின் மகள் மற்றும் பெரிய மகன் இராமதாஸ் ஆகியோருக்கு திருமணம் முடிந்து, அவர்கள் தனித்தனியே தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். 

ஆனந்த் வேலை விஷயமாக வெளியூரில் தங்கியிருப்பதால், எப்போதாவது வீட்டிற்கு வந்து செல்வார். இதனால் மல்லிகா தனது குடிசை வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று மல்லிகாவின் இரண்டாவது மகன் ஜெயபால் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மகன் வேலைக்கு செல்லாமல் இருப்பதை தாய் கண்டித்துள்ளார். 

thiruvallur

இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால், வீட்டினுள் இருந்த கத்தியை எடுத்து தாயின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துள்ளார். மேலும், தாயின் உடலை வீட்டிற்குள்ளேயே புதைக்க முடிவெடுத்து குழியும் தோண்டியுள்ளார். ஒருகட்டத்தில் ஜெயபால் சோர்வில் உறங்கியுள்ளார். இந்த சமயத்தில், இராமதாஸ் எதற்ச்சையாக தாயை காண வீட்டிற்குள் வந்தபோது, தாய் பிணமாக இருப்பதை பார்த்துள்ளார். 

மேலும், சகோதரர் ஜெயபால் குழிதோண்ட முயற்சித்து உறங்கிக்கொண்டு இருப்பதை கண்டுள்ளார். அவரை எழுப்பி விசாரணை செய்த போது, சகோதரனால் தாய் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. மேலும், வீட்டிற்குள்ளேயே தாயை புதைக்கப்போவதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதனால் பேரதிர்ச்சியடைந்த ராமதாஸ் வெள்ளவேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கவே, ஜெயபாலை கைது செய்து வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.