சாலையை கடக்கும் போது சோகம்.. அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அரசு அதிகாரி பலி..!



Thiruvallur Govt Officer Died Accident Govt Bus

சென்டர் மீடியன் வழியே சாலையை கடந்த அரசு அதிகாரி, கால் இடறி விழுந்து அரசு பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் பரிதாபமாக பலியாகினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாள நகர், இரயில் நிலைய சாலை பகுதியில் இருக்கும் குடியிருப்பில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 58). இவர் பூண்டி வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில், உதவியாளராக இருக்கிறார். நேற்று வழக்கம்போல காலையில் பணிக்கு சென்றவர், இரவு 07:30 மணியளவில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் மணவாள நகர் சென்டர் மீடியனில் ஏறி இறங்கி சாலையை கடந்துள்ளார். திடீரென கால் இடறி அவர் விழுந்துவிடவே, அவ்வழியே வந்த பூந்தமல்லி - திருவள்ளூர் அரசு பேருந்தின் முன்புற சக்கரத்தில் சிக்கியுள்ளார். 

thiruvallur

பேருந்தின் முன்புற சக்கரம் ஆறுமுகத்தின் மீது ஏறி இறங்கியதில், படுகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மணவாள நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.