BREAKING : அட அட... செம! பெண் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன அமைச்சர்! தவெக அரசு காட்டும் அதிரடி!!!
அரசுப் பெண் ஊழியர்களுக்கு முக்கியமான சலுகையை அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது குழந்தைக்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் வகையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் அமைச்சர் சரத்குமார் வெளியிட்டார்.
12 வாரங்களில் இருந்து ஓராண்டாக உயர்வு
இதுவரை அரசுப் பெண் ஊழியர்களின் முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே 365 நாட்கள், அதாவது ஓராண்டு காலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது அதுவும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தை அதிரவைத்த காஞ்சிபுரம் இரட்டைப்படுகொலை.. அரங்கேறிய கொடூரம்..!
தாய் - சேய் நலனுக்கு முக்கியத்துவம்
குழந்தைப் பேறு மற்றும் அதற்குப் பிந்தைய பராமரிப்புக் காலத்தில் பெண் ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கவலையின்றி குடும்பத்துடன் இருக்க இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிறந்த குழந்தையை கவனிப்பதற்கும் தாயின் உடல்நலத்தை பேணுவதற்கும் கூடுதல் அவகாசம் கிடைக்கும்.
பெண் ஊழியர்களுக்கு கூடுதல் நிம்மதி
மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் அரசு பெண் ஊழியர்களுக்கும் முதல் இரண்டு குழந்தைகளுக்கான சலுகையைப் போலவே நீண்டகால விடுப்பு கிடைப்பது வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது. மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு, தாய் மற்றும் சேய் நலனை கருத்தில் கொண்ட முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து வந்த இளைஞர் கொடூர கொலை.. துள்ளத்துடிக்க நேர்ந்த சோகம்.!