மயிலாடுதுறையில் பரபரப்பு.. வானவெடி குடோனில் ஏற்பட்ட தீ விபத்து.. 4 பேர் உடல் சிதறி பலி..!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் வசித்து வருபவர் மோகன். இவர் தனக்குச் சொந்தமாக வானவெடி தயாரிக்கும் குடோன் ஒன்றை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று வானவேடி குடோனில் தீ விபத்து ஏற்பட்டு வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறியதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு பணியாற்றி வந்த பணியாளர்களில் 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் அவர்களது உடலானது பல மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டு சிதறி கிடந்ததாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் காய்மடைந்த 4 பேரை மீட்ட தீயணைப்பு துறையினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.