13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் கைது., சிறுவனுக்கு நடந்த கொடுமை..!  Theni Man Arrested Sexual Harassment 13 Aged Minor Boy

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் ஜல்லிக்கட்டு தெருவில் வசித்து வருபவர் செல்வேந்திரன் (வயது 40). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். செல்வேந்திரனுக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். 

ஆனால், இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாகவே மனைவியை பிரிந்து தனியே வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 3 மாதமாக 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருகட்டத்தில் பெற்றோரிடம் நடந்ததை கூறவே, பதறிப்போன சிறுவனின் பெற்றோர் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் செல்வேந்திரனை போக்ஸோvil கைது செய்து சிறையில் அடைத்தனர்.