13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
தொழில் நஷ்டம், வயிற்று வலி, தீராத நோய்... பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்.. நடந்தது இதுதான்.. கண்ணீர் சோகம்.!

தேனி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் தங்களின் சூழ்நிலை காரணமாக ஒரே நாளில் உயிரை மாய்துகொண்டனர்.
தேனி மாவட்டத்திலுள்ள வருஷநாடு மேல மஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 40). இவர் ரேடியோ செட் வைத்து நடத்தி வருகின்ற நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ராஜதானி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி கூடலூரை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவர் லாரி ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா (வயது 38). தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே நிர்மலாவுக்கு வயிற்று வலி இருந்த காரணத்தால், பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேனி பெரியகுளம் ஏழுமலை நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரின் மனைவி முத்துலட்சுமி (வயது 62). இவர் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று விஷ மாத்திரையை சாப்பிட்டு மயங்கி இருக்கிறார். உறவினர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் பெரியகுளம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.