இரண்டு பேருக்கும் இடையில் சிக்கி தவிக்கும் 25 எம். எல்.ஏக்கள்! எடப்பாடி போட்ட கண்டிஷன்னா... இல்ல விஜய் கொடுத்த ஆஃபரா! அடுத்த 3 நாட்களில் நடக்கப்போகும் அதிரடி திருப்பம்.!!!



admk-dissident-mlas-future-crisis

தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த 25 அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அரசியல் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. கட்சி கொறடா உத்தரவை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக தரப்பு ஏற்கனவே சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு அளித்துள்ளது. இதனால், அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அதிருப்தி அணியினர் தற்போது கடும் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: நள்ளிரவில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை.... 5 இல் 1 பங்கு ரகசியம்! எடப்பாடி பதவியை பறிக்க விஜயபாஸ்கரின் மாஸ்டர் மூவ்.! அடுத்தடுத்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் கூட....!!!

மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் முயற்சி

இந்த சூழலில், 25 பேரும் மீண்டும் அதிமுகவிலேயே இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று எஸ்பி வேலுமணி தரப்பு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான நிபந்தனையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. “முதலில் சபாநாயகர் முன்பு மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும். அதன் பிறகே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை” என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மே 28-க்குள் முக்கிய முடிவு?

சட்டமன்ற விதிகளின்படி, கொறடா உத்தரவை மீறிய உறுப்பினர்களை கட்சித் தலைமை குறிப்பிட்ட காலத்திற்குள் மன்னித்தால், தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அவகாசம் மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதனால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தற்போது இரு வழித்தேர்வுகளுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருபுறம் மன்னிப்பு கடிதம் அளித்து மீண்டும் அதிமுகவில் தொடர்வதா என்ற யோசனை நிலவுகிறது.

விஜய் தரப்பின் அரசியல் கணக்கு

மறுபுறம், முதல்வர் விஜய் தரப்பிலிருந்தும் இந்த எம்.எல்.ஏக்களுக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “எம்.எல்.ஏ பதவி பறிபோனாலும் கவலைப்பட வேண்டாம்; தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையுங்கள். இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்” என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்தித்து தவெக தனிப்பெரும்பான்மை அரசாக வலுப்பெற வேண்டும் என்ற அரசியல் கணக்கிலும் விஜய் தரப்பு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் அணியினர் கடும் அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மே 28-க்குள் அவர்கள் எடுக்கும் முடிவு, தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றத்திற்கான முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: இனி வேற வழியில்லை... எடப்பாடி காலில் விழவேண்டிய நிலைதானா? இன்று நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தை.... அடுத்தக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்.!!!