தமிழகம்

வேகமாக வந்த ரயில்.! எதிரே வந்த யானை.! அடுத்து நடந்த பயங்கரம்.! அதிர்ச்சி வீடியோ.!

Summary:

கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்துள்ள சின்னாம்பதி, நவக்கரை மலைக் கிராமங்களில் உள்ள காட்டு யானை

கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்துள்ள சின்னாம்பதி, நவக்கரை மலைக் கிராமங்களில் உள்ள காட்டு யானைகள் அருகே உள்ள வாளையாறு ஆற்றில் நீர் அருந்துவதற்காக வழக்கமாக வந்து செல்லும். அவ்வாறு வரும் யானைகள் ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து நீர் அருந்தச் சென்றாக வேண்டும். 

இந்நிலையில் இன்று அதிகாலை 1. 30 மணியளவில் யானைக் கூட்டம் ஒன்று ஆற்றில் நீர் அருந்த வந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ரயில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மீது மோதியது. இதில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயமடைந்த யானை அங்கேயே படுத்துக் கிடந்துள்ளது. இது குறித்து ரயில் ஓட்டுநர் வனத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து கால்நடை மருத்துவ குழுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த கால்நடை மருத்துவர்கள் காயமடைந்த யானைக்கு வலி நிவாரணி மருந்து செலுத்தி சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து ரயில்களின் வேகத்தைக் குறிப்பிட்ட இடத்தில் குறைத்து மெதுவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


Advertisement