நண்பர் இறந்த சோகம்... வேதனையில் முதியவர் எடுத்த விபரீத முடிவு..!

நண்பர் இறந்த சோகம்... வேதனையில் முதியவர் எடுத்த விபரீத முடிவு..!


the-tragedy-of-the-death-of-a-friend-the-tragic-decisio

திருப்பூர் மாவட்டம் மன்னரைப் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரும் நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரமணியன் நண்பர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

தனது நெருங்கிய நண்பர் உயிரிழந்ததை தாங்க முடியாமல் மனவேதனையில் தவித்துள்ளார் சுப்பிரமணி. இதனால் அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். இருப்பினும் அந்த வேதனையிலிருந்து மீள முடியாமல் இருந்துள்ளார் முதியவர்.

Stressed

இந்நிலையில் நேற்று காலை சுப்பிரமணி மன்னரைப் பகுதியில் உள்ள திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் நடைப்பயிற்சி செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த வழியாக வந்து தனியார் பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் பேருந்தின் சக்கரம் சுப்பிரமணியின் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த போலீசார் சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுப்பிரமணியின் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.