பாதுகாப்பு தரவேண்டிய காவலர்களே அரங்கேற்றிய சம்பவம்., கோவையில் பரபரப்பு.!

பாதுகாப்பு தரவேண்டிய காவலர்களே அரங்கேற்றிய சம்பவம்., கோவையில் பரபரப்பு.!


the-security-guards-who-were-supposed-to-provide-securi

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில், உத்திரபிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தாசிம் மற்றும் சாருக் ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவரும் டிவி மற்றும் கியாஸ் அடுப்பு வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த 20ம் தேதி தாசிம், சாருக் இருவரும் டி.வி.க்களை கண்ணம்பாளையம் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றனர்.

அப்போது சூலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் முருகன் (34), அவருடன் அங்கு நின்றிருந்த பள்ளபாளையத்தைச் சேர்ந்த பிரதீஸ் (27) ஆகியோர் இவர்களை தடுத்து நிறுத்தினர். தாசிம் மற்றும் சாருக் கொண்டு வந்த தொலைக்காட்சி திருடப்பட்டதாகவும், அவர்கள் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினர் முருகன் மற்றும் பிரதீஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

Coimbatore

பின்னர் இருவரையும் அந்த பகுதியில் உள்ள பட்டறைக்கு அழைத்துச் சென்று கட்டிவைத்தனர். போலீசார் முருகன் மற்றும் பிரதீஷ் சேர்ந்து தாசிம் மற்றும் சாருக் தங்கியிருந்த முகவரியை கேட்டறிந்தனர். அன்று இரவே, அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கிருந்த 5 டி.வி, கேஸ் ஸ்டவ் மற்றும் ரொக்கத்தை எடுத்து கொண்டு சென்றுவிட்டார்கள்.

Coimbatore

இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் தாசிம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், பிரதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.