கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை திருப்பி அனுப்பாத மாமியார்.. ஆத்திரத்தில் பழி தீர்த்த கணவன்..!

கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை திருப்பி அனுப்பாத மாமியார்.. ஆத்திரத்தில் பழி தீர்த்த கணவன்..!


The mother-in-law who did not send back the wife who took her away in anger.. The husband took the blame in anger..!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வசித்து வருபவர்கள் சரவணன் - மகாதேவி தம்பதியினர். இவர்கள் தங்களது மூன்றாவது மகளை மணப்பாறையை சேர்ந்த பிரபு என்பவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இதனால் பிரபுவின் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மனைவியை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்து வர பிரபு பலமுறை முயற்சி செய்தும் அதற்கு அவரது மாமியார் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது மனைவியை அழைத்து வர பிரபு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Crime

அப்போது மாமியார் கண் அயர்ந்த நேரம் பார்த்து மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார். ஆனால் அதற்குள் மாமியார் எழுந்து பிரபுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு மாமியார் என்றும் பார்க்காமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் மகாதேவி சரிந்து விழுந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து காவல் நிலையம் சென்ற பிரபு நடந்தவற்றை கூறி சரணடைந்தார். பின்னர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.