மழைக்காலத்தில் கட்டாயம் கடைபிடிக்க சில பயனுள்ள அறிவுரைகள்!படித்து பயன்பெறுங்கள்

மழைக்காலத்தில் கட்டாயம் கடைபிடிக்க சில பயனுள்ள அறிவுரைகள்!படித்து பயன்பெறுங்கள்



the actions to be takes care on rainy season

தமிழகம் முழுவதும் தற்போது ஓரளவிற்கு ஆங்காங்கு மழை பெய்யத் துவங்கியுள்ளது. இந்த மழை காலத்திலும் பணியின் நிமித்தமாக நாம் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே சென்று வரும் கட்டாய சூழலில் வாழ்ந்து வருகிறோம். இதனால் இந்த மழை காலங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் இதோ:

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் உடனடியாக கை மற்றும் கால்களை சோப்புப் போட்டு் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். நன்றாக சோப் போட்டுக் கைகளைக் கழுவிவிட்டுத்தான் குழந்தைகளைத் தூக்க வேண்டும்.

Rain in chennai

எப்போதும் கையோடு குடை அல்லது ரெயின் கோட் எடுத்துச்செல்வது நல்லது.

நன்றாகக்  கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரைப் பருக வேண்டும்.

உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், சாலையோர உணவுகளைத் தவிர்க்கவும்.

வீட்டு ஜன்னல், படுக்கையறையைச் சுற்றிலும் கொசு வலையைப் பொருத்தலாம்.

Rain in chennai

தினமும் சாதாரண நீரில் குளிக்கலாம். அதிகக் குளிராக இருந்தால், வெது வெதுப்பான நீரில் குளிக்கலாம்.

இருமல், தும்மல் வரும்போது, கட்டாயம் சுத்தமான கைக்குட்டையைப் பயன் படுத்த வேண்டும்.

வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வீட்டுச் சுவர்களில் டி.டி.டி  மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும்.

தேங்காய் ஓடு, டயர், தகரம், பிளாஸ்டிக் டப்பாக்கள், ஜன்னல் ஓரங்கள் ஆகியவற்றில்தான் டெங்குவை உண்டாக்கும் கொசுக்கள் வசிக்கும். ஆகையால் தேவையற்ற பொருட்களை பொது இடங்களில் போடக் கூடாது.

குழந்தையை முத்தமிடு்வதைத் தவிர்க்க வேண்டும். முத்தமிடும்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிருமிகள் குழந்தைகளுக்குப் பரவ வாய்ப்பு இருக்கிறது.