தாலி ஈரம் காய்வதற்குள் புதுமணப்பெண் விபரீதம்.. மாப்பிள்ளை வீட்டில் நடந்தது என்ன? தஞ்சாவூரில் திடுக்.!
புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, முதல்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்டாலின் ஆரோக்கிய பிரபாகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அம்மாபேட்டை பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி. இவரின் மகள் ஜான்சி அஞ்சலி (வயது 26).
திருமணம்:
ஜான்சி அஞ்சலிக்கும் - ஸ்டாலின் ஆரோக்கிய பிரபகருக்கும் கடந்த ஜூன் 04ம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் திருமணம் முடிந்து 4 நாட்கள் ஆகிய நிலையில், கடந்த ஜூன் 08ம் தேதி இரவு மாப்பிள்ளை குடும்பத்தினர் ஜான்சியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!

தற்கொலை:
அப்போது, ஜான்சி அஞ்சலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், உடனடியாக வீட்டுக்கு வருமாறும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்த்துப்போன மூர்த்தி பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், திருமணம் முடிந்து 4 நாட்களே ஆவதால் உதவி ஆட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவல்துறை அதிகாரி போக்ஸோவில் அதிரடி கைது.!