பயங்கரம்.. கொள்ளிடம் ஆற்றில் சீறிப்பாய்ந்த கார்.. நிகழ்விடத்திலேயே பலியான தம்பதியினர்..!Terrible.. The car plunged into the Kollidam river.. The couple died on the spot..!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரானது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பழைய கொள்ளிடம் ஆற்றின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கார் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த தம்பதியினர் இருவர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இந்த விபத்து குறித்து போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

accident

அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் காருடன் கவிழ்ந்து உயிரிழந்த தம்பதியினரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.