19 நிமிட அந்தரங்க வீடியோ.. நீங்கள் ஷேர் செய்தீர்களா?.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!



19-min-viral-video-controversy-sharing-may-lead-to-3-ye

சமூக ஊடகங்களில் வைரலாகும் 19 நிமிட வீடியோவை பகிர்ந்தால் வரும் ஆபத்து குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் மிக பிரபலமாகும். அந்த வகையில் சமீபத்தில் 19 நிமிட வைரல் வீடியோ ஒன்று மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இளம் ஜோடி தனிமையில் இருக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியதாக அந்த வீடியோ வைரலாக்கப்பட்ட நிலையில், இது ஏஐ கொண்டு உருவாக்கப்பட்டதா? என்பது குறித்த தகவலும் இல்லை. 

19 நிமிட வீடியோ:

இந்த வீடியோ குறித்த வதந்தி பரவி அது மீம்ஸ்களாகவும் மாறியது. பல்வேறு பெண்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் 19 நிமிட வீடியோ தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இதனிடையே இவ்வாறான வீடியோவை பார்ப்பது அல்லது பகிர்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றம் என்ற எச்சரிக்கையை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: நம்பவே முடியல! பாம்பின் தலையில் இருக்கும் நாகமணி! வெவ்வேறு கோணங்களில் ஜொலிக்கும் ரத்தினம்! வைரலாகும் வீடியோ.....

19 நிமிட வீடியோ

3 ஆண்டுகள் சிறை:

இந்த வீடியோவை ஷேர் செய்தால் பணம் கிடைக்கும் என பலரும் இவ்வாறான உள்ளடக்கத்தை பரப்பி வரும் நிலையில், இதற்கு கடுமையான சட்டங்கள் இருப்பதால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்படுகிறது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

வீடியோ பகிர்ந்தால் குற்றம்:

இது தொடர்பான வீடியோவை பரப்புவது, பகிர்வது போன்றவை குற்றமாகவும் கருதப்படுகிறது. பகிரப்பட்ட வீடியோவில் இருப்பது யார்? அவர்களின் நிலை என்ன? என்பது குறித்த எந்த விஷயமும் தெரியாத நிலையில், தற்போது இந்த வீடியோக்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகி இருக்கிறது.