தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
#Breaking: தென்மாவட்டங்களை புரட்டியெடுக்கும் அதிக கனமழை: வெள்ளத்தின் பிடியில் வீதிகள்.! நீச்சலடிக்கும் இளசுகள்.!
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 5 நாட்களுக்கு மழைபெய்யும் வகையில் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்ட கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் அங்கு மழை அதிகளவு கொட்டித்தீர்க்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம், திருநெல்வேலி, ராதாபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் வீதிகளில் நீர் ஓடுவதால், பலரும் நீச்சல் அடித்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது.