தமிழகம்

கிராம மக்கள் கும்பிடும் ஆதிபராசக்தி கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்.! அதிகாலையில் கிராம மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, புல்லான்விடுதி கிராமத்தில் ஆதிபராசக்தி கோவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த புல்லான்விடுதி கிராமத்தில் ஆதிபராசக்தி கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு அப்பகுதி மக்கள் நாள்தோறும் சென்று வழிபடுவது வழக்கம். இந்தநிலையில் அந்த கோவில் மர்ம நபர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் அப்பகுதியினர் புல்லான்விடுதி கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவில் அருகே சென்றபோது. அந்த கோவில் சேதமைடைந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி முக்கியஸ்தர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.

கிராம மக்கள் தினம்தோறும் வழிபடக்கூடிய கோவிலை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக விரோத செயலை செய்த கயவர்களை காவல்துறை விரைந்து  கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Advertisement